பெற்ற விருதுகள் • 1988 ல் இளைஞர் சேவைகள் மன்றமும், இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடாத்திய கவிதைப்போட்டியில்அகில இலங்கை , ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது பெறப்பட்டது.


 • 1999 ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற ரத்ன“தீப விருது விழாவில் (ரத்ன தீப”சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர்) ( ரத்னதீபம் ) பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
 • 2002 இல் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அனுசரணையோடு நடாத்தப்பட்ட உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இளம் படைப்பாளிக்கான விருது பெறப்பட்டது.

 • 2005 ஆம் ஆண்டு மாவனெல்ல உயன்வத்தையில் நடைபெற்ற "ப்ரிய நிலா" இலக்கிய விழாவின் போது (கலை அரசி ) பட்டமும் விருதும் பெற்று கௌரவிக்கப்பட்டது.

 • 2009 இல் பல்கலை வேந்தர் , ஞானக்கவி , சட்டத்தரணி , பிரதியமைச்சர், அல் - ஹாஜ் கெளரவ எஸ்.நிஜாமுதீன் (பா.உ) அவர்களால் நிந்தவூர் ஆர்.கே.மீடியா பணிப்பாளர் ராஜகவி ராஹில் இலங்கை வானொலி அறிவிப்பாளர் அவர்களின் சார்பில் ) கவித்தாரகை பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

 • 2011 இல் சாய்ந்தமருது லக்ஸ்டோ அமைப்பினால் கலைமுத்து ( மருதமணி , முத்து) ஆகிய இரு பட்டங்களும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 • 2011 இல் மகாத்மா காந்தி அவர்களின் ஜனனதின நினைவு விழாவின் போது கண்டி மலையாக கலை கலாசார சங்கத்தினால் (கவிதைச் சிற்பி ) பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

 • 2012 இல் அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் ( சாம ஸ்ரீ, தேசகீர்த்தி ,கலாசூரி ,சமூக ஜோதி) ஆகிய நான்கு பட்டங்களும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 • .2012இல் எக்ஸ்டோ  அமைப்பு கலை உலகில் ஆற்றி வந்த கவிதை இலக்கிய சேவைக்காக திறமைக்கு மரியாதை - (பாவரசு பட்டமும்) விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 • 2012 இல் ஏ .எம் ராஜா , ஜிக்கி அவர்களின் ஜனன தின நினைவு விழாவின் போது மலையக கலை கலாசார சங்கத்தினால் (இலங்கையின் சிறந்த பெண் கவிஞருக்கான பட்டமும் ) விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 • 2012 இல் இலங்கை தேசிய கவிஞர்கள் சம்மேளனத்தின் 23 வது விருது வழங்கல் மற்றும் கௌரவிப்பு விழாவில் காவிய ஸ்ரீ, (காவியத் தங்கம்) எனும் பட்டம் பெறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக